களனி ஆற்று வெள்ளத் தடுப்பு அணை உடையக்கூடும் என சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் உண்மையற்றவை என்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
குறித்த அணையில் எந்தவித பாதுகாப்பு குறைபாடுகளும் இல்லை என்பதையும், அணையின் நிலைத்தன்மை முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

மழை காரணமாக நீர்மட்டம் அதிகரித்திருந்தாலும், அவை அணையின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலாகவும் இல்லை எனவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அத்துடன், தவறான தகவல்களை நம்பாது அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
