யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக நல்லூர் பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

அத்தோடு யாழ்ப்பாணம் தொடருந்து நிலையமும் நீரில் மூழ்கியுள்ளது. குருநகர் பகுதி வாழ் மக்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மருதங்கேணியில் அந்தோணி பெர்னான்டோ என்ற 66 வயது மதிக்கத்தக்க முதியவரே உயிரிழந்துள்ளார்.

சீரற்ற காலநிலை

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 10,005 குடும்பங்களைச் சேர்ந்த 31,871 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

யாழில் சீரற்ற காலநிலை - நீரில் மூழ்கிய நல்லூர்: பறிபோன உயிர் | Bad Weather With Heavy Rain And Strong Winds Today

இன்று இரவு எட்டு மணி வரையிலான நிலவரப்படி அனர்த்த முகாமைத்துவ பிரிவு இதனை அறிக்கையிட்டுள்ளது.

24 தற்காலிக தங்குமிடங்களில் 561 குடும்பங்களைச் சேர்ந்த 1,956 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் 234,503 குடும்பங்களைச் சேர்ந்த 833,985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 159 உயிரிழப்பு ஏற்பட்டதுடன் 203 பேர் காணாமல் போனதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

You may like this

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments