நாட்டில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் காரணமாக, மாவிலாறு மடை மற்றும் அணைக்கட்டு (Bund) ஆகியன தற்போது அபாயகரமான நிலையில் இருப்பதாக நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

 மஹாவலி கங்கையின் ஆற்றுப்படுகையில் தாங்க முடியாத அளவுக்கு அதிக நீர்வரத்து ஏற்பட்டுள்ளதாலும், அந்த பகுதியில் பெய்த மழையினாலும், அணைக்கட்டையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் ஒரே அணைக்கட்டு போல காட்சியளிக்கின்றன.

அணைக்கட்டும் உடையும் அபாயம் 

இந்த அணைக்கட்டும் உடையும் என எதிர்பார்க்கவில்லை என்றாலும், உடைவதற்கான ஆபத்து இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.

மாவிலாறு நீர்த்தேக்கம் அபாயகரமான நிலையில்..உடனடியான வெளியேறுமாறு எச்சரிக்கை! | Maavilaru Red Alert Due To Extreme Weather

குறித்த பகுதி வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால், அணைக்கட்டை நெருங்க முடியாதுள்ள நிலையில், மாவிலாறு அணைக்கட்டின் கீழ்நிலைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருப்பதுடன், இது இரவு நேரம் என்பதால், முடிந்தளவு உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், நிலைமையைப் பற்றி தொடர்ந்தும் கண்காணித்து, மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments