புதிய கல்வி திட்டத்தின் கீழ் வரலாறு மற்றும் கலை பாடத்திட்டம் இனப் பிரிவினைகளின்றி அனைத்து இலங்கையர்களுக்கும் பொதுவான பார்வையுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் காலங்களில் புதிய பாடசாலை மாணவர்களுக்கு வரலாற்று பாடத்தை கற்பிக்கும் போது “சிங்கள வரலாறு” மற்றும் “தமிழ் வரலாறு” என வேறுபடுத்தாமல் பொதுவாக “இலங்கை வரலாறு” என கற்பிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (03.12.2025) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயத்தை சுட்டிக்காட்டினார்.
புதிய கல்வித் திட்டம்
மேலும் கருத்து தெரிவித்த அவர், “தற்போதும் வரலாற்று பாடத்தில் தமிழ் மன்னர்கள் தொடர்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

புதிய கல்வித் திட்டத்தின் கீழ் வரலாறு பாடத்தில் பொதுவாக “ இலங்கை வரலாறு” என கற்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பாடத்திட்டத்தை தயாரிப்பதில் தமிழ் அறிஞர்கள் மற்றும் கல்விமான்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆறாம் வகுப்புக்கான புதிய வரலாற்று பாடத்திட்டம் தற்போது புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதேவேளை, கலைப் பாடத்திட்டதிலும் கூட இந்த முறைமை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்
