மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு கடற் கரையில் அடையாளம் காணப்படாத நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று(04.12.2025) கரை ஒதுங்கியுள்ளது.

கடற்கரைக்குச் சென்ற கடற்நொழிலாளர்கள் இவ்வாறு பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியிருப்பதை அவதானித்துள்ளனர்.

இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை

இந்நிலையில் ஸ்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

கரை ஒதுங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு | Batticaloa Death Body Woman Ashore At Sea

சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளது.

எனினும் சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என அப்பகுதி பொதுமக்களும், கிராம சேவை உத்தியோகஸ்த்தரும் தெரிவித்துள்ளனர். 

நீதிவான் நீதிமன்ற அனுமதியைப்பெற்று சடலத்தினை பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மேலதிக தகவல் – குமார்

கரை ஒதுங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு | Batticaloa Death Body Woman Ashore At Sea
Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments