டித்வா புயல் தாக்கத்தினால் பசறை மலைச்சரிவில் சிக்கிய குடும்பத்தினர் மூன்று நாட்களுக்கு பின் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் காரணமாக பசறைப்பகுதியில் கனமழை பொழிந்து பல வீடுகள் மண்சரிவில் மூழ்கியிருந்தது இந்த நிலையில் குணபால என்பவரது வீடும் புதைந்த நிலையில் குணபால அவரது மனைவி மற்றும் அவரது மகன் ஆகியோர் சமையலறையில் இருந்தனர்.

மண்சரிவில் சிக்கி மூன்று நாட்களின் பின் மண்ணுக்குள் இருந்து உயிரோடு வந்த குடும்பம் | Family Came Alive 3 Days After Trapped Landslide

உயிர் போராட்டம்

வீடு முழுவதும் இடிந்து மண்ணில் புதைந்த போதிலும்,சமையலறை பகுதி மட்டும் அதிசயமாக தப்பியது.

மூன்று நாட்கள் மண்ணுக்குள் சிக்கி உயிர் போராட்டத்தில் இருந்த அவர்கள் மூன்றாம் நாளில் கனரக இயந்திரங்களின் அதிர்வுகள் மேலிருந்து கேட்டவுடன் குணபால சிறிய ஓட்டையில் கரண்டியால் தட்டி தன் இருப்பை அறிவித்தார்.

இதனை அவதானித்த இராணுவத்தினர் கனரக இயந்திரங்களின் உதவியுடன் அவர்களை மீட்டுள்ளனர்.

  மீட்கப்பட்ட மூவரையும் மேலதிக சிகிச்சைக்காக இராணுவத்தினர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.  

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments