இந்திய கடற் தொழிலாளர்களின் சட்டவிரோத அத்துமீறலை கட்டுப்படுத்தக் கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

இன்று காலை யாழ் மாவட்ட மீனவர்கள் ஒன்றினைந்து முன்னெடுத்த குறித்த போராட்டம் பண்ணை பகுதியில் உள்ள கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அலுவலகத்தின் முன்னால் இருந்து பேரணியாக ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை சென்றடைந்தது.

இதன்போது யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அத்தோடு இந்திய துணைத் தூதரம், வடக்கு மாகாண ஆளுநர், கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் ஆதியவற்றிலும் கடற் தொழிலாளர்களால் மகஜர் கையளிக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!      


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments