அமெரிக்காவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயணத் தடைப் பட்டியலை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் விரிவுபடுத்தியுள்ளார்.

இதன்படி, புர்கினா பெசோ, மாலி, நைஜர், தெற்கு சூடான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும், பலஸ்தீன கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கும் அமெரிக்காவிற்குள் நுழைய முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடைப் பட்டியல்

அத்துடன் ஏற்கனவே பகுதியளவு கட்டுப்பாடுகள் இருந்த லாவோஸ் மற்றும் சியரா லியோன் ஆகிய நாடுகள் தற்போது முழுமையான தடைப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளன.

US Travel Ban Extended to More Countries

இது தவிர, நைஜீரியா, தான்சானியா மற்றும் சிம்பாப்வே உள்ளிட்ட 15 நாடுகளுக்குப் புதிய பகுதியளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் உள்ள பாதுகாப்புச் சோதனை முறைகளில் நிலவும் குறைபாடுகள் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டிப் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு, எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

தடையிலிருந்து விலக்கு

இருப்பினும், அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பவர்கள் (Green Card Holders), தூதரக அதிகாரிகள் மற்றும் முக்கிய விளையாட்டு வீரர்களுக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Trump Adds New Countries to US Ban

இந்த நாடுகள் தங்களது பாதுகாப்பு மற்றும் அடையாள உறுதிப்படுத்தல் முறைகளை மேம்படுத்தும் வரை இந்தத் தடை நீடிக்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments