கிளிநொச்சி தர்மபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியிலிருந்து சட்ட விரோதமான முறையில் அனுமதிப்பத்திரம் இன்றி மணலுடன் பயணித்த டிப்பர் வாகனம், காவல்துறையின் சமிக்ஞையை மிறிச்சென்றதால் காவல்துறையினரால் துப்பாக்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த டிப்பர் வாகனத்தை நிறுத்தாமல் உள் வீதியூடாக தப்பிச்செல்ல முற்பட்ட வேளையிலேயே இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது.

வாகனம் குடை சாய்ந்துள்ளது

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டிப்பர் வாகனம் குடை சாய்ந்துள்ளது.

கிளிநொச்சியில் வாகனம் மீது துப்பாக்கிசூடு | Shots Fired Vehicle Failed To Stop In Kilinochchi

இச்சம்பவத்தில் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக தர்மபுரம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments