ஜோதிடத்தில் குரு பகவான் சுப கிரகமாக அறியப்படுகிறார். இவரின் இயக்கத்தில் ஒவ்வொரு முறையும் மாற்றம் ஏற்படும்பொழுது அது மனிதர்களின் வாழ்க்கையில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு குருபகவான் 3 ராசிகளை கடந்து செல்ல இருக்கிறார்.

ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள்

அதாவது ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் மிதுன ராசியிலும், பின்னர் ஜூன் 2 அன்று அவருடைய உச்ச ராசியான கடக ராசிக்கும், அக்டோபர் 31 அன்று சிம்ம ராசிக்கும் அவர் பெயர்ச்சியாக உள்ளார்.

பிறகு டிசம்பர் 13 அன்று குரு பகவான் வக்கிரமாக சிம்ம ராசியில் இருக்க உள்ளார். இதன் விளைவாக மூன்று ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை உண்டு செய்து அவர்கள் வாழ்க்கையில் ஜாக்பாட்டை கொடுக்க உள்ளது.

மிதுனம்: நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண வரன் இவர்கள் நினைத்தது போல் நடக்கும். காதல் வாழ்க்கையில் ஏற்பட்ட விரிசல்கள் யாவும் விலகி வெற்றியடையும்.

சிம்மம்: குடும்பத்தில் இருக்கக்கூடிய உறவினர்களுடைய உடல் ஆரோக்கியம் மேம்படும். ஒரு சிலருக்கு வெளிநாடுகள் சென்று தொழில் செய்யக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். உணவு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். கடல் கடந்து படிக்க வேண்டும் என்று ஆர்வம் கொள்ளும் மாணவர்களுக்கு பொற்காலம். 

கடகம்:  தொழில் வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கப் போகிறது.  கடனிலிருந்து விடுபடக்கூடிய ஒரு அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலும் உருவாகப் போகிறது. புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு நல்ல காலம்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments