அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பல உயிர்களை காப்பாற்றிய அல் அகமதுக்கு தன்னார்வ அமைப்புகள் மூலம் மில்லியன் கணக்காக டொலர்கள் வந்து குவிந்துள்ளன.

அவுஸ்திரேலியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யூதர்கள் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது  2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இதில் அப்பாவி பொதுமக்கள் 16 பேர் பலியாகினர்.

முதல் கட்ட விசாரணை

முதல் கட்ட விசாரணையில் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானைச் சேர்ந்த சாஜித் அக்ரம், நவீத் அக்ரம் (24) என்பதும், தந்தை, மகனான அவர்கள் இருவரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் உறுதியானது.

அவுஸ்திரேலிய கதாநாயகனுக்கு ஒரு மில்லியன் டொலர் நன்கொடை | Millions Donated For Al Ahmed Treatment

இதற்கிடையே, துப்பாக்கிச்சூடு நடத்தியவர் மீது பாய்ந்து துப்பாக்கியை பிடுங்கிய அல் அகமதுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அவர் சிட்னியின் சதர்லேண்ட் பகுதியில் வணிக வளாகம் நடத்தி வருபவர் (40) என தெரியவந்தது.

இந்நிலையில், துணிச்சலாக செயல்பட்ட பல உயிர்களைக் காப்பாற்றிய கதாநாயகன் அல் அகமதுவின் சிகிச்சைக்காக பல்வேறு தன்னார்வ அமைப்புகள் வசூலித்த ஒரு மில்லியன் டொலர் நன்கொடையை அவரிடம் வழங்கியுள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments