பொலிஸார் தீவிர விசாரணைவவுனியா, கருவேப்பங்குளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவரது கணவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பொலிஸ் பாதுகாப்புடன் யாழ் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.

வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவேப்பங்குளம் பகுதியில் 37 வயதுடைய குடும்ப பெண் ஒருவர் கழுத்து பகுதியில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

தமிழர் பகுதியில் குடும்ப பெண் கொலை ; பொலிஸார் தீவிர விசாரணை | Murder Family Woman Vavuniya Police Actively

இதன்போது கணவனை பொலிசார் கைது செய்ய முற்பட்ட போது கழுத்து பகுதியில் கத்தியால் அவர் குத்தி மயக்கமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஈச்சங்குளம் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் குறித்த சம்பவம் தொடர்பில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பொலிஸ் பாதுகாப்புடன் மேலதிக சிகிசசைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற நீதவான் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டதுடன், தடவியல் பொலிசாரின் உதவியுடன் விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர். 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments