எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பில் போட்டியிடுமாறு தன்னிடம் கேட்டுக் கொண்டதாக அர்ச்சுனா இராமநாதன் எம்.பி தெரிவித்துள்ளார்.

இன்று (24.12.2025) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையான அர்ச்சுனா இராமநாதன் எம்.பி பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அதன் பின்னர் வெளியில் வந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கை

மேலும் கருத்து தெரிவித்த அவர், அது தொடர்பில் எதிர்காலத்தில் சிந்தித்து பார்ப்போம்.ஆனால் யாழ்ப்பாணம் மக்கள் என்னை விட மாட்டார்கள்.கொன்று விடுவார்கள்.அப்படி நான் வருவதென்றால் சட்டத்தரணி கௌசல்யாவை அங்கு நிறுத்திவிட்டே வருவேன்.

அவர் தான் எனக்கு அடுத்தபடியாக பட்டியலில் இருக்கிறார்.அவருக்கு 15 ஆயிரத்திற்கும் மேல் வாக்குகள் கிடைத்துள்ளது.நாடாளுமன்றில் இருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை விட அதிமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.

யாழ்.மக்கள் என்னை கொன்று விடுவார்கள்! எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கைக்கு அர்ச்சுனா வழங்கிய பதில் | Sajith Premadasa Ramanathan Archchuna

நான் நினைக்கிறேன் எமது நாட்டை திருத்த முடியாது.ஒரு சந்தர்ப்பத்தில் அரசுக்கு  எதிராக வாக்களிக்கின்றனர்.பின்னர் எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கின்றனர்.இதனாலே கொழும்பு மாநகர சபை பாதீடு தோல்வியடைந்தது.இது அரசாங்கத்தின் பாரிய வீழ்ச்சியாகவே நான் நோக்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments