பேருந்து தரிப்பிடத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

குறித்த சடலம் இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு மகாவித்தியாலயத்திற்கு முன்னால் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலதிக நடவடிக்கை

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் இவ்வாறு சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். 

பேருந்து தரிப்பிடத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஆண் | Man S Body Recovered From Bus Stand

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தேற்றாத்தீவு கிராமத்தைச் சேர்ந்த 70 வயதுடைய சுப்பிரமணியம் நேசதுரை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில நீதிமன்ற உத்தரவைப் பெற்று மேலதிக நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments