தமிழர் பகுதியில் பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் ; நடுவீதியில் நின்ற பயணிகள்முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணிகளை ஏற்றி பயணித்த பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இச் சம்பவம் இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த தனியார் பேருந்து மீது சுண்டிக்குளம் சந்திப்பகுதியில் கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பேருந்தில் பயணித்தவர்கள் வீதியின் நடுவே இறக்கப்பட்டு மற்றொரு பேருந்தில் ஏற்றப்பட்டு குறிப்பிட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இச் சம்பவத்தால் பேருந்தின் பின்பகுதி கண்ணாடி சேதமடைந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



