தென்கிழக்கு வங்கக்கடல் பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள குறைந்த தாழமுக்க பிரதேசம், அடுத்த 24 மணித்தியாலங்களில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக (Deep Depression) வலுவடையக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றதாகவும் வளிமண்டலவியல் திணைக்கள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.