தமிழர்கள் மீதான போர்க்குற்றங்கள் ஈழத்தமிழருக்கான இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக பேசும்பொழுது ஏதோ ஒரு வகையில் இந்தியா, சர்வதேசத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுக்கும் என்ற சூழல் தொடர்ந்த வண்ணமே தமிழர் தரப்பில் உள்ளது.

இந்த நம்பிக்கையில்தான் தமிழ்தேசிய பரப்பில் பயணிக்கும் கட்சிகளும் செயற்பட்டு வருகின்றன.அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடனான சந்திப்பிலும் இது தொடர்பாக பேசப்பட்டிருந்தன.

யுத்தம் மௌனிக்கப்பட்ட 2009 ற்கு பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்பட்டபோதிலும் தமிழ் கட்சிகள் இந்தியாவிற்கு செல்வதும் அங்கு பேச்சு நடத்துவதும் இடம்பெற்ற வண்ணமே இருந்தன.

தமிழ்தேசிய கூட்டமைப்பு பிளவடைந்த பின்னரும் ஒவ்வொரு தமிழ் கட்சிகளும் தமது கொள்கை கோட்பாட்டின்படி இந்தியாவுடன் பேச்சு நடத்துவது வழக்கமானதாகவே உள்ளது.

இந்தியாவை தொடர்ந்தும் நம்பிக்கொண்டிருக்கும் நிலையில் அதன்மீதான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தியாவின் நகர்வுகள் அமைந்திருப்பதும் வெளிப்படையாக காணக்கூடியதாகவுள்ளது.

அந்த வகையில் ஈழத்தமிழர்கள் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு இவ்வாறு செல்வதற்கு என்னகாரணம் என்பதை விரிவாக ஆராய்கிற்து இந்தக்காணொளி…

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments