அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு துணிவிருந்தால் என்னை கைது செய்து அழைத்துச் செல்லட்டும் என கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ சவால் விட்டுள்ளார்.

வெனிசியூலாவின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ்ஸையும் அமெரிக்க படைகள் கைது செய்துள்ள நிலையில் கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ இவ்வாறு சவால் விட்டுள்ளார்.  

இது தொடர்பாக கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ கூறுகையில், “நான் யாருக்காகவும் பயப்படவில்லை. நீ விரும்பினால் உனக்காக நான் இங்கு காத்திருக்கிறேன்.

மரண தண்டனை

படையெடுப்புகளையோ, படுகொலைகளையோ, ஏவுகணைத் தாக்குதல்களையோ நான் ஏற்கவில்லை.

முடிந்தால் கைது செய்யட்டும் - ட்ரம்ப்பிற்கு கொலம்பியா ஜனாதிபதி சவால் | Come Get Me Colombian President Challenges Trump

நான் உளவுத்துறையை ஏற்றுக்கொள்கின்றேன். உளவுத்துறையுடன் வாருங்கள். நேருக்கு நேர் மோதிப் பார்ப்போம். அரசியல் மாஃபியாக்களால் கொலம்பிய மக்களை ஏமாற்றுவதை முதலில் நிறுத்துங்கள்.

கொலம்பியர்கள் 7 இலட்சம் பேருக்கு அவர்கள் மரண தண்டனை அளித்துள்ளனர். நான் மீண்டும் ஒரு ஆயுதத்தைத் தொடமாட்டேன் என்று சத்தியம் செய்திருக்கின்றேன்.

ஆனால், தாய்நாட்டிற்காக நான் மீண்டும் ஆயுதம் ஏந்தவும் தயாரக இருக்கிறேன் என சவால் விடுத்துள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments