இலங்கை அமைந்துள்ள அமைவிடம் தற்போது வரமா சாபமா என்பது தெரியாததன் தற்போது இலங்கைக்கு பிரச்சினையாக மாறியுள்ளது என்று முன்னாள் மூத்த அதிகாரி இரேனியஸ் செல்வின் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
சிங்கப்பூர் அதனுடைய அடைவிடத்தை வரமாக மாற்றி தங்களுடைய பொருளாதாரத்தை கட்டியெழுப்பினார்கள்.
ஆனால் இலங்கை தன்னுடைய பூகோள அரசியலில் தன்னை நிலைக்கடுத்த தவறியுள்ளது.
திருகோணமலை துறைமுகத்தை கைப்பற்றுபவன் இந்து சழுத்திரத்தை ஆள்வான் என்பதற்கிணங்க தற்போது பல நாடுகள் இலங்கை மீது கை வைத்துள்ளார்கள்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..
