புதிய இணைப்பு
பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியின் முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற போது காரில் ஐந்து பேர் பயணித்துள்ளதுடன், அவர்களில் நால்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
கிளிநொச்சி – ஏ35 வீதியில் கார் ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர்.
மேலும் மூவர் விபத்தில் படுகாயமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
முரசுமோட்டை பகுதியில் இன்று குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

விசுவமடு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த காரும் வவுனியாவில் இருந்து விசுவமடு நோக்கி பயணித்த பேருந்துமே நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.



