பொலன்னறுவை, சிறிபுர கலுகெலே வெலிய பகுதியில் நேற்று (13) காட்டு யானை தாக்குதலுக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் கணவர் படுகாயமடைந்து தெஹியத்தகண்டிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தம்பதியினர் தங்களது வயலுக்குச் சென்றபோதே காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளானதாக தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
