யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் பெண் ஒருவரை கைது செய்வதற்கு சென்றவேளை அங்கு பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினருடன் பொதுமக்கள் முறுகலில் ஈடுபட்டுள்ளனர்.

வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள பெண் ஒருவரை கைது செய்வதற்காக மருதங்கேணி பொலிசார் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள குறித்த வீட்டை திடீர் சுற்றிவளைப்பு செய்தனர்.

யாழில் பெண்ணை கைது செய்ய சென்ற STFக்கு நேர்ந்த நிலை ; திடீர் சுற்றிவளைப்பால் வந்த வினை | Stf Faces Trouble Trying To Arrest Woman In Jaffna

பிடியாணை 

இதன்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றதுடன் குறித்த வளாகத்தை மோப்ப நாய் கொண்டு சோதனை செய்தனர்.

பொலிசார் அத்துமீறி தமது வீட்டை சோதனையிடுவதாகவும், அநாகரிகமாக நடந்து கொள்வதாகவும் கூறி பொதுமக்கள் சிலர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து பொலிசார் விசேட அதிரடிப்படையின் உதவியுடன் குறித்த பகுதியில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே பகுதியில் 9 கஞ்சா பொதிகளை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியிருந்த போதிலும் யாரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments