.
குறித்த பகுதியில் இராணுவ முகாமுடன் இணைந்த வகையில், கடை ஒன்று இராணுவத்தினரால் நடத்தப்பட்டு வந்தது.
நகரசபை அதிரடி
யாழ்ப்பாணம் பருத்தித்துறை துறைமுகப்பகுதியில் உணவு கையாளும் நிலையமாகச் செயற்பட்டு வந்த இராணுவ வியாபார நிலையத்தைப் பூட்டுவதற்கு பருத்தித்துறை நகரசபை நடவடிக்கை எடுத்துள்ளதுஇந்நிலையில் பருத்தித்தறை நகர சபைத் தவிசாளர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில், நகரசபைப் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ப.தினேஷ் உள்ளிட்ட குழுவினர் நேற்று இராணுவ விற்பனை நிலையத்துக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது வியாபார உரிமம் பெறப்படாது குறித்த நிலையம் இயங்குகின்றமை கண்ட றியப்பட்டது. அதனையடுத்து தற்காலிகமாக மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
