அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.
ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.
இந்நிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி – 2 ஸ்பூன்
- செம்பருத்தி இலை – 5
- செம்பருத்தி பூ – 4
- விளக்கெண்ணெய் – 1 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை
- முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை கழுவி தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
- அரிசி வெந்து வந்ததும் அதில் செம்பருத்தி பூ மற்றும் செம்பருத்தி இலை சேர்த்து 15 நிமிடங்கள் நன்கு கொதிக்கவைக்கவும்.
- பின் அதனை நன்கு ஆறவைத்து ஒரு பாத்திரத்தில் வடிக்கட்டி எடுத்துக்கொள்ளவும்.
- இதற்கடுத்து இதில் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து உச்சந்தலை முழுக்க இதை தடவி நன்கு மசாஜ் செய்யவும்.
- பின்னர் அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு பின் தலைமுடியை நன்கு அலசிக்கொள்ளலாம்.
- இதனை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் தலைமுடி உதிர்வதை தடுத்து நீளமான கூந்தலை பெறலாம்.
