தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டதாகவும், மூன்று பேர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கி ஏந்திய ஒரு குழுவினரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தாக்குதலாலிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் மிரட்டி பணம் பறித்தல் வழக்குடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகிறது, மேலும் இது குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றக் கும்பல்களால் நடத்தப்படும் குற்றச் செயல்கள்
தென்னாபிரிக்காவில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் நடத்தப்படும் குற்றச் செயல்கள் சமீப காலமாக அதிகரித்து வருவதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவல்துறை அறிக்கைகளின்படி, கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரை மட்டும் குற்றச் செயல்களால் தினமும் சுமார் 63 பேர் இறந்துள்ளனர்.
