உக்ரைன் போர் முனையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் விசேட படையணி உறுப்பினர்கள் மற்றும் இலங்கை இராணுவத்தின் விசேட படையணியினர் கூட்டாக ரஷ்யாவுக்கு எதிராக சண்டை பிடிப்பதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் புதன்கிழமை (21.01.2026)  நடைபெற்ற எழுத்தாளர் தர்மன் விக்ரமரத்ன எழுதிய ‘தயா பத்திரண கொலையின் மறைக்கப்பட்ட பக்கம்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டார்.

உக்ரைன் போர் முனையில்

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,  

அண்மையில் எனக்கு நெருக்கமான ஒரு இராணுவ அதிகாரியொருவர் மேற்கண்ட சம்பவத்தை விவரித்தார்.

அதாவது உக்ரைன் போர் களத்தில் பங்கரின் இரு பக்கங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜெயந்தனின் விசேட படையணியினர் மற்றும் இலங்கை இராணுவத்தின் விசேட படையணியினர் கூட்டாக பணத்துக்காக ரஷ்யாவுக்கு எதிராக சண்டையிடுகின்றனர்.

விடுதலைப் புலிகள் - இராணுவம் இணைந்து போர்க் களத்தில்: சம்பிக்க தெரிவித்த இரகசிய தகவல் | Patali Champika Ranawaka Jvp

இவ்வாறான ஒரு நிலை தான் நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது. எமது சமூகத்திற்கு ஆயுதமேந்திய கிளர்ச்சிகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது ஏன்? இரு தலைமுறையினர் 71 மற்றும் 88-89 ஆம் ஆண்டுகளில் ஆயுதமேந்திய கிளர்ச்சிகளுக்கு முக்கொடுத்தோம்.

இவை வடக்கிலும், தெற்கிலும்  நடந்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து போராடிய போராளிகள் அதிகளவானவர்களை சந்தித்துள்ளேன். அவர்கள் இன்று மிகவும் அசாதாரண நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறான ஒரு நிலைக்கு நாடு தள்ளப்பட்டிருப்பதற்கு பொதுவான ஒரு விமர்சனம் தேவையாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments