மத்திய மெக்சிகன் மாநிலமான சலான்காவில் Mexican city of Salamanca கால்பந்து மைதானத்தில் துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் 11 பேர் கொல்லப்பட்டு  12 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சலாமன்கா மேயர் சீசர் பிரிட்டோ சமூக ஊடக தளங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையில், துப்பாக்கித் தாரிகள் ஒரு கால்பந்து போட்டியின் முடிவில் வந்ததாக கூறினார்.

துப்பாக்கித்தாரிகள் நடத்திய தாக்குதல்

பத்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.பின்னர் ஒருவர் மருத்துவமனையில் இறந்தார். காயமடைந்தவர்களில் ஒரு பெண்ணும் ஒரு சிறுவனும் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் நமது மாநிலத்தில் துரதிர்ஷ்டவசமாக அனுபவித்து வரும் வன்முறை அலைகளில் ஒன்றாகும். துரதிர்ஷ்டவசமாக, குற்றவியல் குழுக்கள் அதிகாரிகளை அடக்க முயற்சிக்கின்றன, இது அவர்களுக்கு சாத்தியமற்றது என்று அவர் மேலும் கூறினார்.

வன்முறையைக் கட்டுப்படுத்துவதில் உதவி கோரி ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளேன். அந்தப் பகுதியில் பாதுகாப்பை மேம்படுத்தவும், மக்களைப் பாதுகாக்கவும், குற்றவாளிகளைக் கண்டறிய ஒன்றிணைந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலி: 12 பேர் காயம்:மெக்சிகோவில் நடந்த பயங்கர சம்பவம் | 11 Killed In Shooting At Soccer Stadium In Mexico

“பொறுப்பானவர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள்” என்று பிரீட்டோ தனது பேஸ்புக் பதிவுகளில் மேலும் கூறினார். குவானாஜுவாடோ ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகவும் தொழில்துறை மையமாகவும் உள்ளது.

ஆனால் இது மெக்சிகோவில் கும்பல் சண்டையால் மிகவும் ஆபத்தான மாநிலமாகும் என்று உத்தியோகப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments