திருகோணமலையில் வயல் காவலுக்கு சென்றவருக்கு நேர்ந்த கதிதிருகோணமலை- நாமல்வத்த பகுதியில் வயல் காவலுக்குச் சென்றவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து இன்று (26.01.2026) ஏற்பட்டுள்ளது.

விசாரணை

இவ்வாறு மீட்கப்பட்டவர், அதே பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 61 வயதுடைய எம். தாசுதீன் என்பவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று(25) இரவு அவருடைய வயலுக்கு காவலுக்குச் சென்றவர் இன்று 01 மணி வரைக்கும் வீட்டுக்கு வராத காரணத்தினால் அவரைத் தேடி பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் சென்றுள்ளனர்.

திருகோணமலையில் வயல் காவலுக்கு சென்றவருக்கு நேர்ந்த கதி | Man Who Went On Field Duty In Trincomalee Died

இதன்போது, குறித்த நபர், வயலில் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்துக்கு உள்ளே குளிர் காரணமாக தீ மூட்டிய நெருப்புக்குள் தவறுதலாக விழுந்து எரிந்த நிலையில் கிடந்ததாக பொலிஸார் விசாரணையில் வாக்குமூலம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து. மொரவெவ பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குறித்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த மரணம் தொடர்பில் மொரவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments