யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு கிராம அலுவலர் பிரிவிலுள்ள பிரதேச சபையின் கொல்களம் அமைந்துள்ள காணியானது 2012 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் தற்போது அந்த காணியை விட்டு இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.
அங்கிருந்து வெளியேற்றப்பட்ட இராணுவத்தினர் அராலி இராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த காடாப்புலம் காணியானது இன்று புதன்கிழமை பிரதேச சண்டிலிப்பாய் செயலாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.



