அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், “ஈரான் அமெரிக்க இலக்குகளை தாக்குமா?” என்ற கேள்வி சர்வதேச அளவில் கவனம் பெறுகிறது.
பாதுகாப்பு வல்லுநர்களின் தகவலின்படி, ஈரானுக்கு அமெரிக்க இலக்குகளை தாக்கும் இராணுவ திறன் கோட்பாட்டளவில் உள்ளது.
குறிப்பாக, மத்திய கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் தூரத்திற்குள் வருகின்றன.
ஆனால், நேரடி தாக்குதல் நடைபெற வாய்ப்பு குறைவு என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். காரணம், அத்தகைய நடவடிக்கை பெரும் பிராந்திய போராக மாறும் அபாயம் கொண்டது.
இதனால், ஈரான் இதுவரை நேரடி தாக்குதலைத் தவிர்த்து, தன்னுடன் தொடர்புடைய ஆயுதக்குழுக்கள் (proxy groups) மூலம் மறைமுக அழுத்தங்களை வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், அமெரிக்காவின் வலுவான பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சர்வதேச கூட்டணிகள், ஈரானின் முடிவுகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளாக உள்ளன.
ஈரான் தாக்கும் திறன் கொண்டிருந்தாலும், அரசியல் மற்றும் பொருளாதார விளைவுகளை கருத்தில் கொண்டு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகின்றதா என்ற கேள்வி எழும் பின்னணியில் இவ்வாறான விடயங்களை விரிவாக ஆராய்கிறது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி…
