தமிழர் பகுதியில் குடும்பப்பெண்ணின் உயிரை பறித்த லொறிஅம்பாறை – சியம்பலாண்டுவ வீதியில் மினீமிறு சந்திக்கு அருகில், இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (07) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சியம்பலாண்டுவ நோக்கி காய்கறிகளை ஏற்றிச் சென்ற லொறி, எதிர் திசையில் வந்த முச்சக்கரவண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி, இரண்டு பெண்கள் மற்றும் ஆண் ஒருவர் காயமடைந்து, அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் தல்கஸ்பிட்டிய, ஹபலன்காவ பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
விபத்துடன் தொடர்புடைய லொறி மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
