இந்த உலகத்தில் ஒவ்வொரு சுதேசிய இனங்களும் தமக்கான சுதந்திர தேசமொன்றை வேண்டி நிற்கிறார்கள்.தாம் இல்லா விட்டாலும் தமது சந்ததியாவது அந்த சுதந்திர காற்றை சுவாசிக்கவேண்டும் என்ற ஒரு ஏக்கம் அவர்களுக்கு இருந்த வண்ணமே உள்ளது.

இவ்வாறு அந்த ஏக்கத்தை தனது நெஞ்சில் நிறுத்தி அதனை வெளிப்படையாகவே ஐ.நா பொதுச்சபையில் வெளியிட்டார் ஈழத்தமிழரான கிருஷ்ணா வைகுந்த வாசன்.

யாழ்ப்பாணம் அளவெட்டியை பிறப்பிடமாக கொண்ட வைகுந்தவாசன், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே 25 இலட்சம் மக்களை கொண்ட பலம்பொருந்திய தமிழீழத்தில் இருந்து வந்திருக்கிறேன்.

தமிழீழம் போன்ற அடக்கி ஒடுக்கப்பட்ட சிறிய தேசங்கள் உலகின் ஆக உயர்ந்த மன்றமான இந்த சபையில் தமது முறையீடுகளை வைக்க முடியாது என்றால் நாங்கள் எங்கேதான் போவது? தயவு செய்து ஒரு நிமிடம் என்னை பேசுவதற்கு அனுமதியுங்கள் என ஐ.நா சபையில் கர்ஜித்தார்.

ஈழத்தமிழரான வைகுந்தவாசன் யார், அவரின் பின்னணி என்ன என்பதை விரிவாக ஆராய்கிறது இந்தக்காணொளி….

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments