உலகின் தலைசிறந்த தீர்க்கதரிசிகளில் ஒருவராகக் கருதப்படும் பாபா வங்கா (Baba Vanga), 2026ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் மனிதர்களின் வேலைவாய்ப்புகள் முற்றிலுமாகப் பாதிக்கும் என வெளியிட்டுள்ள கணிப்பு இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

பாபா வங்காவின் கணிப்புகளின்படி, 2026ஆம் ஆண்டு முதல் மனித உழைப்பிற்குப் பதிலாக இயந்திரங்கள் மற்றும் மென்பொருட்களின் ஆதிக்கம் மிகத் தீவிரமாக இருக்கும்.

தற்போதைய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பல துறைகளில் ஆட்குறைப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இவரது கணிப்புகள் அதனை உறுதிப்படுத்துவது போல் அமைந்துள்ளதாகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர்.

உலகப் பொருளாதாரம்

2026இல் AI தொழில்நுட்பம் அதன் உச்சத்தை எட்டும் என்றும், இதனால் வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்படும் திடீர் மாற்றங்களால் உலகப் பொருளாதாரத்தில் பெரும் ஏற்றத்தாழ்வுகள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் அவர் கணித்துள்ளார்.

அத்தோடு, அதே ஆண்டில் கடுமையான இயற்கைச் சீற்றங்கள் மற்றும் சில முக்கிய அரசியல் மாற்றங்களும் ஏற்படும் என அவரது கணிப்புகள் எச்சரிக்கின்றன.

2026 வேலைவாய்ப்பு சந்தை குறித்து அதிர வைக்கும் பாபா வங்காவின் கணிப்பு! | Baba Vanga 2026 Ai Predictions Job Cuts

பல்கேரியாவைச் சேர்ந்த பார்வையற்ற தீர்க்கதரிசியான பாபா வங்கா, 9/11 தாக்குதல் மற்றும் பிரெக்சிட் (Brexit) போன்ற பல உலக நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்தவர் என நம்பப்படுகிறது.

1996இல் அவர் காலமானாலும், அவர் விட்டுச் சென்றதாகக் கூறப்படும் கணிப்புகள் ஒவ்வோர் ஆண்டும் உலக நாடுகளால் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகம் அதிகரித்து வரும் சூழலில், மனித குலத்தின் எதிர்காலம் குறித்த பாபா வங்காவின் இந்த எச்சரிக்கை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments