ஆலமரத்தில் பழங்கள் இருந்தால் அங்கே கிளிகள் இருக்கும் அரவமரத்தில் பழங்கள் இருந்தால் இங்கே கிளிகள் இருக்கும் என சொல்லப்படுவதுண்டு. இவ்வாறு அன்று அங்கே இன்று இங்கே பறக்கும் சோசல்மீடியா கிளிப்பிள்ளைகளும்; ஜால்ரா அடிகாரர்களும் அக்கரை இக்கரை என எக்கரைகளிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

உருட்டல்களை செய்வது அதன்பின்னர் முன்னைய உருட்டலை மறுக்க இன்னொரு உருட்டலை செய்து கொள்ளும் இந்த வியாதிகள் சமூகவலைபதிவர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை உள்ளது.

இந்த பின்னணியில் தேசியதலைவரின் சாதி மறுப்பு காதல் குறித்த தனது முன்னைய கருத்தில் தெரிவிகப்பட்ட சில சர்ச்சைகருத்துக்கள் ஒரு பிறழ்வாக வந்துவிட்டதான ஒரு விளக்கத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேற்று வழங்கியுள்ளார்.

கடந்தமாதம் சென்னையில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையற்றிய திருமாவளவன் தனது உரையில் தமிழீழதேசிய தலைவர் தனது சாதி மறுப்பு காதலுக்காக 14 பேரை சுட்டுக் கொன்றதாக சொன்ன விடயம் சர்ச்சையானதும் இந்த விடயத்தில் நேற்று அவர் ஒரு நீண்ட தன்னிலை அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தலைவர் குறித்து திருமாவளவன் குறிப்பிட்ட இந்த விடயம் ஈழத்தமிழர்களின் பரப்பில் அதிர்வுகளை ஏற்படுத்திய நிலையில் தனது உரையில் பிறழ்வு ஏற்பட்டமைக்கு தான் மிகவும் வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ள நிலையில் இந்த விடயங்களை தாங்கிவருகிறது செய்திவீச்சு..

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments