கொழும்பு – ஜிந்துப்பிட்டி பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த பகுதியில் உள்ள அழகு கலை நிலையமொன்றிற்குள் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதன்போது, கடை உரிமையாளர் உட்பட நால்வர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிகை அலங்கார நிலையத்திற்கு முடி வெட்டுவதற்காக வந்த மூன்று நபர்களில் ஒருவரே சூட்டு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். 

இதேவேளை களுத்துறை வடக்கு காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட வாடியமங்கட பகுதியில் இன்று (14) இரவு 7.50 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 32 வயதுடைய நபர் ஒருவரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments