லண்டனிலிருந்து வந்து நபர், யாழில் விதவை பெண்ணுக்கு செய்த துரோகம்

பிரிட்டனில் வசித்து வரும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராக, திருமணம் செய்வதாக நம்ப வைத்து விதவை பெண்ணை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிரித்தானியாவின் வசித்து வருவதாகக் கூறப்படும், யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய தம்பையா ஜெயக்குமார் என்ற நபர், 36 வயதான அரசுத் துறையில் பணியாற்றும் விதவை பெண் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒருவரை திருமணம் செய்வதாக கூறி நெருங்கிய உறவில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணை

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், திருமணமாகி சில மாதங்களிலேயே 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

லண்டனிலிருந்து வந்து நபர், யாழில் விதவை பெண்ணுக்கு செய்த துரோகம் | Man Who Came London Got Pregnant Jaffna Escapes

அதன் பின்னர் சமூக வலைத்தளங்களில் ஆறுதல் தெரிவித்து வந்தவர்களில் ஜெயக்குமாரும் ஒருவர் என கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் சமூக வலைத்தளச் செய்திகளை புறக்கணித்து வந்த அந்தப் பெண், பின்னர் ஜெயக்குமாரின் நட்பை ஏற்றுக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் எந்தவித அசிங்கமான உரையாடல்களும் இன்றி அக்கறையுடன் தொடர்பில் இருந்து நம்பிக்கையைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

2019ஆம் ஆண்டு இறுதியில், தன் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாகவும், தனது இரண்டு பிள்ளைகள் மனைவியுடன் இருப்பதாகவும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பின்னர் பலமுறை இலங்கைக்கு வந்து சந்திக்க விருப்பம் தெரிவித்த அவர், பொது இடங்களில் சந்தித்ததாகவும், தொடர்ந்து உறவை ஆழப்படுத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், திருமணம் செய்வதாகக் கூறி பல மாதங்கள் சேர்ந்து வாழ்ந்த பின்னர் பெண் கர்ப்பமாகியதாகவும், அதன்பின்னர் குறித்த நபர் லண்டனுக்கு திரும்பிச் சென்றதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தேவைப்படுகின்றன.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments