அமெரிக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கருத்தில் கொண்டு எந்த நாடாவது வரி விதிப்பு விவகாரத்தில் விளையாட நினைத்தால், அந்த நாடுகளின் பொருள்கள் மீது மோசமான முறையில் மிக அதிக வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகில் உள்ள பல நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது ட்ரம்ப் பரஸ்பர வரி விதித்தார்.

இந்த வரி விதிப்புகள் செல்லாது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.

அரசமைப்புச் சட்டம்

அத்தோடு, வரி விதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத்தான் அந்நாட்டு அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், “அமெரிக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கருத்தில் கொண்டு எந்த நாடாவது குறிப்பாகப் பல ஆண்டுகளாக அமெரிக்காவைச் சுரண்டி வரும் நாடுகள் விளையாட நினைத்தால் அந்த நாடுகளின் பொருள்கள் மீது மோசமான முறையில் மிக அதிக வரி விதிக்கப்படும்.

உலக நாடுகளுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை...! | Trump Warns Global Countries High Import Tariffs

இந்த வரி, அண்மையில் அந்நாடுகளின் பொருள்கள் மீது அமெரிக்கா விதித்த வரியைவிட மிக அதிகமாக இருக்கும்.

வரி விதிப்புக்கு அமெரிக்க நாடாளுமன்ற ஒப்புதலை நான் பெறத் தேவையில்லை.

அந்த அனுமதி நீண்ட காலத்திற்கு முன்பே பல வடிவங்களில் ஏற்கனவே பெறப்பட்டுள்ளது.

இந்த அனுமதிகள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளால் உறுதி செய்யப்பட்டுள்ளன” என அவர் தெரிவித்துள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments