கிளிநொச்சிக்கு படிக்க வந்த தென்னிலங்கை மாணவர்களின் மோசமான செயல்கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் புதன்கிழமை(25) காலை இரு மாணவர்கள் குஷ் வகை போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் .

ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, ஜேர்மன் டெக் கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களின் உடைமையில் இருந்து குஷ் வகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சிக்கு படிக்க வந்த தென்னிலங்கை மாணவர்களின் மோசமான செயல் | Southern Students Arrested Drugs In Kilinochchi

கைது செய்யப்பட்ட இரு மாணவர்களும் தென்னிலங்கையில் இருந்து வந்து கல்வி கற்பதாக தெரியவந்துள்ளது.

 ஒரு மாணவனிடமிருந்து 1 கிராம் மற்றும் மற்றைய மாணவனிடமிருந்து 710 மில்லி கிராம் குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது கைது செய்யப்பட்ட மாணவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments