காலி அருகிலுள்ள கடற்பரப்பில் மூழ்கிய ஈரானிய போர்க்கப்பல் சம்பவத்தில் இதுவரை சுமார் 80 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் Pete Hegseth, இந்தியப் பெருங்கடலில் ஒரு ஈரானிய கடற்படைக் கப்பலை அமெரிக்கா டார்பிடோ மூலம் தாக்கியதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பலுக்கு தாக்குதல் ; 80 பேரின் சடலங்கள் மீட்பு ; அமெரிக்கா வெளியிட்ட பரபரப்பு காணொளி | Us Attacks Iranian Ship In Sri Lankan Waters

இன்று பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இலங்கை கடற்படையின் பேச்சாளர், இன்று அதிகாலை அவசர அழைப்பு ஒன்று கிடைத்ததாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, கப்பலில் இருந்த மாலுமிகளை மீட்க இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை இணைந்து கூட்டு மீட்பு நடவடிக்கை மேற்கொண்டதாக கூறினார்.

இந்த நடவடிக்கையின் விளைவாக, 32 மாலுமிகள் உயிருடன் மீட்கப்பட்டு காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதுடன், பிராந்திய பாதுகாப்பு நிலைமை குறித்து கவலை அதிகரித்துள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments