ஈரானில் இஸ்ரேலின் தாக்குதல்கள் நடந்து வரும் மோதலுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான ஈரானிய வீரர்களைக் கொன்றதாக இஸ்ரேலிய விமானப்படையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“கடந்த இரண்டு நாட்களில், ஆயிரக்கணக்கான ஈரானியப் படைகளைக் கொன்றுள்ளோம்,” என்று இராணுவத்தால் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில், ராமத் டேவிட் விமானப்படைத் தளபதி கேணல் “அலெஃப்” தெரிவித்தார்
கிழக்கு தெஹ்ரானில் உள்ள ஒரு பெரிய ஈரானிய இராணுவ வளாகத்தில் நடந்த சமீபத்திய தாக்குதல் அலையில் தான் பங்கேற்றதாக விமானப்படைத் தளபதி கூறுகிறார்.
டசின் கணக்கான போர் விமானங்களைக் கண்டேன்
“நான் குண்டுகளை வீசுவதற்கு சில வினாடிகளுக்கு முன்பு, நான் வலது மற்றும் இடதுபுறம் பார்த்தேன், என் அருகில் டசின் கணக்கான போர் விமானங்களைக் கண்டேன்.
அவை சுதந்திரமாக பறந்து, நூற்றுக்கணக்கான தொன் துல்லியமான வெடிமருந்துகளை வீசி, இலக்குகளை அழித்து வருகின்றன,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
