ஈரானில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியில், அந்நாட்டின் இராணுவ மற்றும் நிர்வாக முடிவுகளை எடுக்கும் முழு அதிகாரத்தையும் ஈரானிய புரட்சிகர காவல் படை தனது கைகளில் எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழக்கமாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் வழிகாட்டுதலில் இயங்கும் இந்த அமைப்பு, தற்போது நிலவும் அசாதாரண சூழலால் “போர்க்காலத் தலைமை” பொறுப்பை ஏற்றுள்ளது.

 அதிரடி மாற்றம்

இந்த அதிரடி மாற்றத்தின் மூலம், ஈரானின் வெளியுறவுக் கொள்கை மற்றும் இராணுவ பதிலடி நடவடிக்கைகள் இனி மிகவும் தீவிரமாகவும், சமரசமற்ற முறையிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானில் ஆட்சி அதிகாரம் புரட்சிகர காவல் படை வசம் : போர்ச் சூழலில் அதிரடி தீர்மானம் | Middle East War Tension

குறிப்பாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான மோதல்களில் மென்மையான போக்கைக் கடைபிடிக்காமல், நேரடி மற்றும் கடுமையான தாக்குதல்களை முன்னெடுக்கும் அதிகாரத்தை இந்தப் படை பெற்றுள்ளது.

இந்த அதிகார மாற்றம், ஈரானின் அரசியல் கட்டமைப்பில் இராணுவத்தின் பிடியை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இது பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும், தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்புகளைக் குறைக்கும் என்றும் அஞ்சப்படுகிறது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments