மத்திய கிழக்கு யுத்தத்தை நிறுத்துமாறு அமெரிக்காவை வலியுறுத்தியும், ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று (06) கொழும்பில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்தப் போராட்டங்களில் இலங்கைக்கான ஈரான் தூதுவர் மற்றும் இந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.போராட்டம் 

கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு அருகில் இன்று நண்பகல் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

முஸ்லிம் சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் போராட்டத்தில், இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh), ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்பாகவும் இன்று காலை அமைதியான முறையிலான போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தினால் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments