மத்திய கிழக்கில் தொடரும் மோதல் காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 150 அமெரிக்க டொலர்கள் வரை உயரக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் புதிய எரிசக்தி நெருக்கடி உருவாகும் அபாயம் உள்ளதாகவும் கட்டார் எரிசக்தி அமைச்சர் சாத் அல்-காபி (Saad al-Kaabi) எச்சரித்துள்ளார்.

போர் மோதல்கள் முடிவு

போர் மோதல்கள் முடிவுக்கு வந்தாலும் அதன் தாக்கங்கள் வழமைக்கு திரும்புவதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக கட்டார் உள்ளிட்ட மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க இராணுவத்தளங்களை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இதேவேளை, கட்டாரில் அமைந்துள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவத் தளமான ‘அல் உசெய்த்’ (Al Udeid) விமானப்படைத்தளம் மீது இன்று ஈரானால் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதனையடுத்து நிலையில், அவை முறியடிக்கப்பட்டதாக கட்டார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments