தமிழர் பகுதியில் முகம் சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்அம்பாறை -காரைதீவு பகுதியில் முகம் சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அறுவடை இயந்திரத்தை ஏற்றி உழவு இயந்திரத்தை செலுத்தி வந்த சாரதி ஒருவரின் சடலமே காரைதீவு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் முகம் சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் | Man S Body Found With In Tamil Area

மேலதிக விசாரணை

காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி வளைந்த வட்டையில் இன்று மதியம் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் அம்பாறை- நவகம்புர உதயபுர பகுதியைச் சேர்ந்த 39 வயது மதிக்கத்தக்கவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவருக்கு வலிப்பு நோய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முகப்பகுதி சிறிது சிதைந்த நிலையில் காணப்படுவதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments