உங்களுக்குரிய வேலையை மட்டும் நீங்கள் பாருங்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு மற்றும் அமெரிக்க அரசுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் கடிதம் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து இந்தியா 30 நாட்களுக்கு கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ள அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவிக்கும்விதத்தில், கமல் ஹாசன் டொனால்ட் ட்ரம்புக்கு சனிக்கிழமை (மார்ச் 7) கடிதம் எழுதியுள்ளார்.

உலகளாவிய அமைதி

அந்தக் கடிதத்தில் அவர், “இந்திய மக்களாகிய நாங்கள், இறையாண்மைமிக்க மற்றும் சுத்ந்திரமானதொரு நாட்டைச் சார்ந்தவர்கள். நாங்கள், தொலைதூரத்திலுள்ள வெளிநாடுகளிலிருந்து வரும் கட்டளைகளை ஒருபோதும் ஏற்க மாட்டோம்.

உங்களுக்குரிய வேலையை மட்டும் பாருங்கள்! ட்ரம்ப்புக்கு கமல் ஹாசன் கடிதம் | Kamal Haasan S Open Letter To Trump

தயவுசெய்து, உங்கள் தகுதிக்குள்பட்ட உங்களுக்கான வேலையை மட்டும் நீங்கள் கவனியுங்கள்.இறையாண்மை நாடுகளின் இடையே பரஸ்பர மதிப்பு இருத்தலே உலகளாவிய அமைதி நீடித்திருக்க அடிப்படை அடித்தளமாகும்.

உங்கள் நாட்டுக்கும் அதன் மக்களுக்கும் அமைதியும் வளமும் நல்க வாழ்த்துகிறேன்.இப்படிக்கு,கமல் ஹாசன் – ஒரு பெருமைமிகு இந்தியக் குடிமகன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments