அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அரசாங்கங்கள் இணைந்து, ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பைக் கைப்பற்ற சிறப்பு படைகளை அனுப்புவது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானிடம் சுமார் 400 கிலோவுக்கும் அதிகமான யுரேனியம் கையிருப்பில் இருப்பதாகவும் இது அணு ஆயுதம் தயாரிப்பதற்கு தேவையான அளவென கருதப்படுகிறது.
சர்வதேசப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, ஈரானின் அணுசக்தித் திறனை முழுமையாகக் கட்டுப்படுத்த அமெரிக்க மற்றும் இஸ்ரேலியச் சிறப்புப் படைகள் இணைந்து இந்தத் திட்டத்தை வகுத்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
