உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் கடல் சுரங்கங்களை அமைக்கத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தகவல்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த பகுதியில் கடல் சுரங்கங்களை வைத்திருந்தால் அதற்கு இதுவரை காணாத அளவிலான இராணுவ விளைவுகள் ஏற்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ட்ரம்பின் அறிவிப்பு

அவர் தனது சமூக ஊடக தளத்தில் வெளியிட்ட பதிவில், “ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் எந்த சுரங்கங்களையும் வைத்திருக்கிறதா என்ற தகவல் தற்போது எங்களிடம் இல்லை. இருந்தாலும் அவர்கள் வைத்திருந்தால் உடனடியாக அவற்றை அகற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் அடுத்த நகர்வு! அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சவால் | Us Warns Iran Build Sea Mines In Strait Of Hormuz

இந்த நிலையில், கடந்த சில நாட்களில் சிறிய எண்ணிக்கையிலான சுரங்கங்கள் மட்டும் இதுவரை அமைக்கப்பட்டுள்ளளதாகவும் ஆனால் ஈரான் தனது சிறிய படகுகள் மற்றும் சுரங்கம் அமைக்கும் திறன் கொண்ட கப்பல்களில் சுமார் 80% முதல் 90% வரை இன்னும் பயன்படுத்தாமல் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

புரட்சிகர காவல்படை

அதன்படி, ஈரானுக்கு தேவையானால் நூற்றுக்கணக்கான கடல் சுரங்கங்களை குறித்த பகுதியில் அமைக்க முடியும் என்று சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் அடுத்த நகர்வு! அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சவால் | Us Warns Iran Build Sea Mines In Strait Of Hormuz

உலகளவில் எண்ணெய் விலைகள் சமீப நாட்களில் உயர்ந்துள்ளன.காரணம், உலகின் முக்கியமான எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

ஈரானின் புரட்சிகர காவல்படை தற்போது ஹார்முஸ் ஜலசந்தியை தங்களது பாரம்பரிய கடற்படையுடன் சேர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments