ஈரான் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ளத் தயாராக இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி இறுதியாக தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு வழங்கிய தொலைபேசி உரையாடலில் இவ்வாறு தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் விளக்கியுள்ளன.

 அதில் ஈரான் “ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது” என்று கூறியதாகவும். ஆனால் “விதிமுறைகள் இன்னும் போதுமானதாக இல்லாததால்” அவர் அதற்குத் தயாராக இல்லை என தெரிவித்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதிய உச்ச தலைவர் எங்கே

அதிகரித்து வரும் எரிவாயு விலைகள் குறித்த கவலைகளை ட்ரம்ப் நிராகரித்துள்ளார். மேலும் ஹார்முஸ் வழியாக செல்லும் திட்டத்தைப் பாதுகாப்பதற்கான திட்டத்தில் மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் மீண்டும் கூறியுள்ளார்.

ஈரான் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம்! நிலைப்பட்டை அறிவித்த ட்ரம்ப் | Agreement To End The War On Iran

“ ஈரானின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறாரா?

ஈரான் மற்ற பிராந்திய நாடுகளைத் தாக்க முடிவு செய்ததில் தான் ஆச்சரியப்படுகிறறேன்

ஈரானின் கார்க் தீவின் மீதான அமெரிக்க தாக்குதல்கள் தீவின் பெரும்பகுதியை முற்றிலும் இடித்துத் தள்ளின. ஆனால்(சிரித்க் கொண்டு) நாம் அதை இன்னும் சில முறை தாக்கலாம் என்றும் கூறினார்.

நாங்கள் ஜலசந்தியை மிகவும் வலுவாக விரிவுபடுத்தப் போகிறோம், மேலும் எண்ணெய் பெறுவதில் ஓரளவு தடைபட்டுள்ள, சில சந்தர்ப்பங்களில் தடைபட்டுள்ள மற்ற நாடுகளும் எங்களுடன் சேரும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments