ஈரான் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் தனது நாட்டை “அணு ஆயுத யுகத்திற்கு”  தயார்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பாவின் பாதுகாப்புச் சூழல் வேகமாக மாறி வருவதால், பிரான்ஸின் அணு ஆயுதத் தடுப்புத் திறனை (Nuclear deterrent) பலப்படுத்துவது தற்போதைய காலத்தின் கட்டாயம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஈரான் போர் உலகளாவிய ஸ்திரத்தன்மையை சீர்குலைத்துள்ள நிலையில், பிரான்ஸ் தனது பாதுகாப்பு கொள்கையை மறுபரிசீலனை செய்து, அணுசக்தி சார்ந்த தற்காப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கத் தொடங்கியுள்ளது.

அணு ஆயுத சோதனைகள் 

மேக்ரோன் தனது உரையில், உக்ரைன் மற்றும் ஈரான் மோதல்கள் ஐரோப்பாவிற்கு விடுக்கப்பட்டுள்ள நேரடி எச்சரிக்கை என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்களை மட்டுமே நம்பியிருக்காமல், பிரான்ஸ் தனது சொந்த அணு ஆயுத பலத்தை நவீனப்படுத்த வேண்டும் என்று அவர் கருதுகிறார்.

ஈரான் போர் எதிரொலி: பிரான்ஸை அணு ஆயுத யுகத்திற்குத் தயார் செய்யும் மேக்ரோன்! | Iran War Echo Macron Will Prepare France Nuclear

இதற்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவும், அணு ஆயுத சோதனைகள் மற்றும் ஏவுகணைத் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்யவும் பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த அதிரடி மாற்றமானது சர்வதேச அளவில் புதிய ஆயுதப் போட்டிக்கு வழிவகுக்கும் என்று ஒரு தரப்பு ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ள போதிலும், நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மேக்ரோன் இந்த உறுதியான முடிவை எடுத்துள்ளார்

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments