சிறிலங்காவில் அனுர அரசாங்கத்தை பொறுத்தவரை அதற்கு இப்போது தமது சிஸ்ரம் சேஞ்சுகள் எல்லாம் நினைத்துபோல நடக்கவில்லை என்ற ஒரு உள்ளுர குறுகுறுப்பு ஏற்பட்டுள்ளது.
அதாவது தாம் வார்த்தை ஜாலங்களைவிடுமளவுக்கு நாடு முறைமை மாற்றம் கொள்ளவில்லை அதாவது சிஸ்ரம் சேஞ் ஆகவில்லை என்பதை கியூஆர் ஆகிய துரிதபதிலளிப்பு முறையும் நினைத்துபோல நடக்காமல் சொதப்பிவருவது ஆதாரப்படுத்தியது.
இதனால் மக்கள் இன்னும் இன்னும் விசனப்படக்கூடாது என்பதற்காக அனுர பொறுப்புகளை தனது தலையில் சுமந்து வண்மான் ஆமியாக விறுவிறுக்கு ஓடத்தலைப்படுவதை அவரது இன்றைய நாடாளுமன்ற உரை எடுத்துக்காட்டியுள்ளது.
அந்தவகையில் இலங்கையின் எல்லைக்குள் ஈரானிய கடற்படைக் கப்பல்கள் நுழைவதற்கும் மத்தள விமான நிலையத்தில் அமெரிக்காவின் இரண்டு போர் விமானங்கள் தரையிறங்குவதற்கும் அனுமதிகள் மறுக்கப்பட்டதான சில பரபரப்பு செய்திகளை அவர் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் இந்த போர்விமானங்கள் எங்கிருந்து வந்தன? இலங்கையில் தரையிறங்கிய பின்னர் எங்கு செல்ல திட்டமிட்டன என்ற விடயங்களை அனுர வழங்கவில்லை.
ஒருவேளை அனுர இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சொன்ன இந்தவிடயத்துக்கு பென்ரகன் அல்லது அமெரிக்காவின் இந்தோ பசிபிக்கட்டளை மையம் எதிர்வரும் நாட்களில் எதிர்வினையாற்றி மேலதிக விடயங்களை வழங்க முடியும் அதாவது பாருங்கள் பாருங்கள் இலங்கையின் கறாரான நடுநிலைமைக் கொள்கையால் அமெரிக்க கோரிக்கையையும் நிராகரித்தோம் ஈரானிய கோரிக்கையையும் நிராகரித்தோம் என சொல்கிறார்.
ஆனால் மத்திய கிழக்குபோரில் இணைவதற்காக தற்போது தென் சீனக் கடலில் இருந்து இரண்டு பாதுகாப்பு போர்க்கலங்களுடனும் 31வது ஈருடக (மரைன் எக்ஸ்பெடிஷனரி யூனிற்)துருப்புகளில் 2200 பேருடனும்; பயணிக்கும் அமெரிக்கவின் ஈருடகதாக்குதல் கலமான யுஎஸ்எஸ் திரிப்போலி இப்போது சிங்கப்பூரைக்;கடந்து இந்து சமுத்திரத்துக்குள் பிரவேசித்த நிலையில் இந்த கப்பல் கொழும்பு துறைமுக வசதிகளை கோரினால் என்ன செய்வது என்ற குறுகுறுப்பு சிறிலங்காவுக்கு இருக்கும் நிலையில் உள்ளுர் மற்றும் மத்தியகிழக்கு போர் உட்பட்ட விடயங்களை தழுவி வருகிறது செய்திவீச்சு…
